Plava Kizarei Aandu 5123 by Swamy Nataraja Kannan
Horoscopes for Aandu 5123
Why we draw kolams on auspicious occasions?

By Vinisha Carpen
வணக்கம்,
கோலம் என்பது அழகு. இது புனிதத்தன்மை, வெற்றி
நேர்மறை போன்றவற்றின் சின்னமாகும்.
தமிழ்நாட்டில் பெண்களின் தின சடங்காக கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. நகரத்திலும் கிராமத்திலும் வாழும் ஆயிரக்கணக்கான பெண்கள் தினமும் அதிகாலையில் எழுந்து தங்கள் வீட்டு வாசலிலும், வீட்டுத் தரையிலும், கோவில்களிலும் கோலத்தை வரைகின்றனர்.
இந்த வடிவங்களை அரிசி மாவினாலும், நிறப்பொடியினாலும், சுண்ணாம்புக்கட்டியாலும் மற்றும் மலர்களின் இதழ்களினாலும் வீட்டு வாசலிலோ, சுற்றுப்புறத்திலோ, பூசை அறையிலோ வரையப்படுகின்றன. பல்வேறு விழாக்களில் வெவ்வேறு வகையான பொருட்களை வைத்து கோலமிடுகின்றனர். கோலத்தைப் புள்ளி வைத்தும் வைக்காமலும் வரையலாம். சில மிக முக்கியமான மற்றும் சிக்கலானக் கோலங்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடந்துவருகின்றன.
பண்டிகை காலங்களிலும், திருமணங்களிலும் மற்ற விழாக்களிலும் குடும்பத்தில் உள்ள பெண்களும் சுற்றத்தாரும் ஒன்று கூடி பெரிய கோலத்தை வரைந்து மகிழ்கின்றனர். பெரியோர்கள் கோலமிடும்பொழுது குழந்தைகள் அவர்களுக்கு உதவி செய்தும், கவனித்தும் இந்தப் பாரம்பரியத்தை கற்றுக்கொள்கின்றனர்.
வீட்டு வாசலில் கோலமிடுவதை செழிப்பாகவும் நன்மையாகவும் நம்புகிறோம். அதுமட்டுமில்லாமல் அந்த இடம் அழகானதாகவும், நல்வரவாகவும் தோற்றம் அளிக்கின்றன.
பொதுவாக கோலத்தை அரிசிமாவினால் இடுவதால் எறும்புகளும், பூச்சிகளும், பறவைகளும் வந்து உண்ணும். அனைத்து உயிர்களும் நல்வாழ்வு பெற வேண்டும் என்னும் நம் தமிழ் நெறிமுறைகள் மாறாமல் நீடிக்கின்றன இப்பாராம்பரியம்.
கோலமிடுவது ஓர் உடற்பயிற்சியாகும். கோலத்தை முதுகுத்தண்டு வளைந்து குனிந்து போடுவதனால் யோகா ஆசனத்தின் நிலையைக் குறிப்பிடலாம். ‘யோகா’ முதுகுத்தண்டிற்கு வலிமை தரும் பயிற்சி என்று நம்புகிறோம். அது இடுப்புக்கும் ஒரு நல்ல பயிற்சியாகும். ஒரு கோலத்தை முழுமையாக முடிப்பதன்மூலம் ஒருவரின் படைப்பாற்றலும், செறிவுத்தன்மையும் அதிகரிக்கிறது. ஏனென்றால் கோலத்தை வரைய அதிக கவனமும், பொறுமையும் தேவைப்படுகிறது.
மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கவும, மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கவும் கோலம் பயன்படுகிறது
எல்லா இளையத் தலைமுறையினரும் நம் பெரியோர்களிடம் கோலத்தை நன்றாக கற்றும், பயிற்சி பெற்றும், நம் பாரம்பரியத்தை உயிரோடு பாதுகாக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
மிக்க நன்றி
திருமதி வினிசா கருப்பன்
In English
The word Kolam in tamil means “beauty” and it is a symbol of sanctity, success and positivity.
Kolam is a daily women’s ritualistic art form created by Tamil women throughout Tamil Nadu in southeastern India. Each day before dawn, during the Brahma muhurtham (believed to be the time when Brahma and all other deities descend to the earth) millions of women in the town, villages and the cities draw kolam on the thresholds and floors of house and temples.
These patterns are drawn using materials such as rice flour powder , colour powder, Chalk powder and flower petals at the entrance of home and within, where poosei and worship is done. Different materials are used for making these patterns to mark different occasions. Patterns are created by either joining dots (called ‘pullis’ in Tamil) to form various designs or drawn freehand. Some very special and intricate ‘kolam’ designs are passed on from one generation to another.
During festivals, weddings and other family functions ladies of the family and the neighbourhood come together to make elaborate ‘kolam’ designs. Children usually pick up the tradition by observing and helping their elders.
It is believed that drawing ‘kolam’ outside the doorstep ushers in goodness and prosperity while also making the place look beautiful and welcoming.
The ‘kolam’ is usually drawn using rice powder or paste enabling ants, little insects and birds to feed on it. This tradition is invariably an extension of the Tamil ethos of oneness with nature fostering the well-being of all living entities.
Drawing a kolam is seen as a great physical exercise. When one bends their body to draw the kolam, their back bone is bent in a position known as the Yogasana. The Yogasana is believed to strengthen the back bone, thus also giving the waist and a hip a good exercise. Completing a kolam increases one’s creativity and concentration. This is because it requires a lot of focus and patience to draw a kolam. Kolam are also believed to reduce stress and improve brain activity.
I wish the young generation to learn and practice the kolam from elders and keep our tradition alive.
Thank you
Mrs Vinisha Carpen
Panjangham 2021/2022
Courtesy of the Mauritius Tamil Temples Federation
Courtesy of the Mauritius Tamil Temples Federation



MESSAGE POUR LE TAMIZHE PUTTAANDU
KEEZHARAI AANDU (PLAVA AANDU) 5123
KEEZHARAI AANDU (PLAVA AANDU) 5123

By Thiru Ganessen Annavee
Former President of L'Union Tamoule de Maurice
Pathirikai Tamil E-News Media
Our Team
Our Team

D. Venethethan
+ MSc Public Sector Management
+ LLM International Business Law

V.L. Venethethan

S.N. Lingiah
World News Extracts

Archives
Editorial
Opinion
- Successful lift off for the Tamil Diaspora
- Nos elites et nos administrateurs
- Les groupes socioculturels et notre société
- Le Respect
- Une approche rationelle de nos traditions
- Le Batisseurs de Kovils
- Les Institutions Humaines
- The Shoes
- La revalorisation des langues ancestrales
- Est ce que nous construisons trop de kovils?